மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கபில்தேவ்… நலமாக இருப்பதாக வீடியோ வெளியீடு…

டெல்லி: திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவன், தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். அதையடுத்து, தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு (வயது 61) கடந்த 23ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்  டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவருக்கு ஆஞ்சிபிளாஸ்டிக்  சிகிச்சை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அதைத்தொடர்ந்து அவர் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதை அவரது மகள் புகைப்படம் வெளியிட்டு உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பிய கபில்தேவ், தான் நலமுடன் இருப்பதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த வீடியோவை 1983 உலகக் கோப்பை அணியினருடன் பகிர்ந்துள்ளார். அவர்களுக்கு பாதுகாப்பாகவும் ஆசீர்வாதமாகவும் இருங்கள்” என்று அன்போடு அறிவுறுத்தி உள்ளார். கபில்தேவ் எப்போதும் போல் உற்சாகமாக பேசி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய அணியில் 1978ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை விளையாடிய கபில் தேவ், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை  பெற்றுக்கொடுத்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது.