மும்பை

முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வெகு நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியில் ஆதாயம் தரும் பணி குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.   இந்த சர்ச்சையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி உள்ளிட்ட பலர் சிக்கி உள்ளனர்.  இந்த விவகாரத்தில் சமீபத்தில் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.   அந்தக் குழுவின் தலைவராக முன்னாள் இந்திய அணியின் தலைவர் கபில்தேவ் பதவி வகித்து வந்தார்.   அவருக்கும் மேலும் உள்ள இருவருக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டிருந்தது.

ஆலோசனைக் குழுவில் இருந்த ரங்கசாமி ஏற்கனவே இந்த நோட்டிசின் அடிப்படியில் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.   தற்போது ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியை கபில் தேவ் ராஜினாமா செய்துள்ளார்.