முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு ‘ஹாட் அட்டாக்’… மருத்துவமனையில் அனுமதி…

டெல்லி: இந்தியாவுக்கு முதன்முறையாக கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன்  கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் (வயது 61) மாரடைப்பு காரணமாக  டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஹரியானா சூறாவளி’  என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் உலகம் உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான கபில் தேவ் 1983 ஆம் ஆண்டில் இந்தியாவை முதல் உலகக் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 இல் கிரிக்கெட் குறித்த தனது கருத்துக்களுடன் கபில் தேவ் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

இவர் ஏற்கனவே  நீரிழிவு தொடர்பான சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அவர் வரைவில் குணமடைய் வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்திய அணியில் 1978ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை விளையாடிய கபில் தேவ், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பெற்றுக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.