பயிற்சியாளரைத் தேர்ந்தெடுகக் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு

டில்லி:

ந்திய அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு செய்ய, முன்னாள் வீரர் கபில்தேவ் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுக்க சிறந்த பயிற்சியாளர்கள் தேவை, திறமையான வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 16ந்தேதி பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், பயிற்சியாளர்கள் தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் குழு அமைத்து பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது.

டில்லியில் நேற்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கபில்தேவ் தலைமையில் குழு உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் அன்ஷூமான் கெய்க்வாட், பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தான் கடந்த டிசம்பர் மாதம் பெண்கள் அணிக்கான பயிற்சியாளரையும் தேர்வு செய்திருந்தனர்.

ஆகஸ்டு மாத இறுதியில் பயிற்சியாளருக்கான நேர்காணல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி