டெல்லி:

டெல்லி ஆத்ஆத்மி ஆட்சியில் சுற்றுலா மற்றும் நீர்வளத் துறை அமைச்சராக இருந்த கபில் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், டெல்லி ஜல் வாரிய தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக கைலாஷ் கெஹ்லாத் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். ராஜேந்திரபால் அமைச்சரவையில் இடம்பெற்று புதிய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

பாஜ ஏஜென்டாக செயல்பட்டதாக கெஜ்ரிவால் கருதிய எம்எல்ஏ குமார் விஸ்வால், அமானத்துல்லா கான் ஆகியோருடன் மிஸ்ரா நெருக்கமாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் கட்சியை கைப்பற்ற முயற்சித்தது தெரியவந்துள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மிஸ்ரா தனது டுவிட்டர் பக்கத்தில்,‘‘டாங்கர் ஊழல் நாளை வெளியாகும். நாளை காலை முதல் ஊழலுக்கு எதிராக போர் தொடங்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.