‘கிரிக்கெட் ஜாம்பவான்’ கபில்தேவ் நலமாக உள்ளார்… புகைப்படத்துடன் சேட்டன்சர்மா தகவல்…

டெல்லி : திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் நலமாக இருப்பதாக அவரது புகைப்படத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா டிவிட் பதிவிட்டுள்ளார்.

உலக கோப்பை நாயகன் கபில் தேவ்விற்கு நேற்று திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.   அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளதாக முதலில் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அவருக்கு ஆஞ்சிபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும்,அவருக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தகவல் வெளியானது.

இந்த நிலையில் கபில்தேவ் நலமாக இருப்பதாக, அவரது மகள் அமயா  கூறியதாகவும், பாபாஜிக்கு ஆபரேசன் முடிந்து நலமாக இருப்பதாகவும், அவர்  தனது மகளுடன் மருத்துவமனை அறையில், சிரித்தபடி போஸ் கொடுக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேட்டன் சர்மா பகிர்ந்துள்ளார்.

டந்த 1978ல் முதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடிய கபில்தேவ், தொடர்ந்து வெற்றி நாயகனாக வலம்வந்தது குறிப்பிடதக்கது. இந்தியாவின் உலக கோப்பை கனவை நனவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.