மோடியின் 69 மணி நேர மவுனத்துக்கு நன்றி? கபில்சிபல் காட்டம்

டெல்லி:

லைநகரில் நடைபெற்ற வன்முறை குறித்து அறிந்துகொள்ள  பிரதமர் மோடிக்கு 69 மணி நேரம் தேவைப்பட்டு உள்ளது… அதற்கு நன்றி  என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்  காட்டமாக கிண்டலடித்து உள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள சிஏஏக்கு எதிரான தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்குள்ள  ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நீடித்து வருகிறது. இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில், சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த வன்முறை மேலும் 3 நாட்கள் நீடித்த நிலையில், சுமார்   150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் காவல்துறை அதிகாரிகள் உள்பட இதுவரை 39 பேர் மரணமடைந்து உள்ளனர்.

கலவரத்தை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த மத்திய, மத்திய அரசு தவறி விட்டதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும்  காங்கிரஸ் உள்பட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதுகுறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பிரதமர் மோடிக்கு கேள்வி விடுத்துள்ளார்.

‘‘டெல்லியில் வன்முறை நடைபெற்ற சமயங்களில் பிரதமர் மோடி தூங்கிக்கொண்டிருந்தாரா?, கலவரம் நடந்த 69 மணிநேரம் கழித்து தான் பிரதமர் மோடி விழித்துக் கொண்டு, மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். விரைவான பதிலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று நக்கலாக கூறினார்.

நாட்டின் பிரதமரான அவர், இதை  முன்கூட்டியே செய்திருக்க வேண்டாமா? என கேள்வி விடுத்தவர், டெல்லி காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் கூட விடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  உள்துறை அமித் ஷா  என்று பார்வையிட வேண்டும்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்றும் கபில்சிபல் வலியுறுத்தினார்.

இதுகுறித்து கபில்சிபல் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

69 மணிநேர  மவுனத்திற்குப் பிறகு எங்கள் சகோதர சகோதரிகளிடம் முறையிட்டமைக்கு நன்றி மோடிஜி.

இதற்கிடையில்: 38 பேர் இறந்தனர்

இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்,

200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
ஆயிரக்கணக்கான வடுக்கள் பண்புகள் அழிக்கப்பட்டன

எங்கள் முதல்வரைப் பொறுத்தவரை அவர் ஜெபித்தார்!

உங்கள் அமைச்சர் காங்கிரஸை குற்றம் சாட்டுகிறார்… என்று தெரிவித்து உள்ளார்.