[embedyt] https://www.youtube.com/watch?v=IXJkWA03atI[/embedyt]

‘காப்பான்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜூலை 5-ஆம் தேதி இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 5.00 மணிக்கு ‘சிறுக்கி’ பாடல் வெளியானது.

ஞானகரவேல் எழுதியுள்ள இப்பாடலை ‘சூப்பர் சிங்கர்’ புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ரமணி அம்மாள் பாடியுள்ளனர். வெஸ்டர்ன் பாடல்களுக்கு பேர்போன ஹாரிஸ் ஜெயராஜ் கிராமத்து சாயலில் இப்பாடலுக்கு இசையமைத்து அசத்தியுள்ளார்.

‘சிறுக்கி சீனிக்கட்டி சிணுங்கி சிங்காரி, அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி’ என்ற வரிகளில் கிராமத்து மண் வாசம் வீசுகிறது .

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மோகன் லால், சாயீஷா, ஆர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது .