மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கப்பேலா’ தெலுங்கில் ரீமேக்காகிறது….!

முகம்மது முஸ்தபா இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘கப்பேலா’. விஷ்ணு வேணு தயாரித்துள்ள இந்தப் படம் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், கொரோனா ஊரடங்கினால் பலர் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை.

அதனைத் தொடர்ந்து ஜூன் 22-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சித்தாரா எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக, மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையையும் சித்தாரா எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தான் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.