1989ல் கங்கை அமரன் இயக்கத்தில், இசை ஞானி இளையராஜாவின் தேன் சிந்தும் இசையில், அப்போதைய இளம் பெண்களின் கனவு நாயகன் ராமராஜன், கனகா, காமெடி சக்கரவர்த்தி கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான, தமிழ் சினிமா கண்ட தன்னிகரில்லா ஒரு காவியம்தான் ‘கரகாட்டக்காரன்’.

கவுண்டமணி, செந்தில் நடித்த வாழைப்பழக் காமெடியும் , சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா, காமெடியும் இந்தப் படத்தை பட்டி, தொட்டி எங்கும் சென்று சேர்த்தன.

நம் மண்ணின் வாழ்க்கை முறையை கிராமியக் கலைகளைப் பற்றிய ஒரு படத்தை உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் படத்தை எத்தனை ஆண்டு காலத்திற்கும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்நிலையில் இப்படம் வெளிவந்து 31 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துவிட்டதென வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .