டில்லி,

கமது எம்பி. மரணத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து எம்.பி.க்கள் வாயில் கருப்புதுணி கட்டி பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆண்டின் பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் கேரள  கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அகமது எம்.பி. மாரடைப்பால் மயங்கிவிழுந்து மருத்துவமனையில் உயிர் துறந்தார்.

கடந்த ஜனவரி 31ந்தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்று பாராளு மன்றத்தினுள் மயங்கி விழுந்த அகமது, அப்போதே இறந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால், டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறுநாள் (1–ந்தேதி) காலையில்தான் அவர் உயிரிழந்ததாக மத்தியஅரசு அறிவித்தது.

பிப்ரவரி 1ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்தே, அகமது எம்.பி.யின் மரணத்தை உடனே அறிவிக்காமல் மத்திய அரசு மறைத்ததாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

அகமது எம்பி.யின். சர்ச்சை மரணம் குறித்து  கடந்தவாரம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

ஆனால், அகமது  மரண விவகாரத்தில் அரசியல் நடத்த வேண்டாம் என ஆளும் கட்சியின் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் வாயில் கருப்பு துணியைக்கட்டிக்கொண்டு  போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துக் கொண்டார்.

இதையடுத்து  பாராளுமன்றம் தொடங்கியது. ஆனால் எதிர்க்கட்சிகள் இப்பிரச்சனையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர்.  இதன் காரணமாக மதியம் வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.