விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார். அதேவேளையில் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் குழுமம் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஏற்கனவே வெளியான பெல்லி சூப்லு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகியப் படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் கரன் ஜோஹர் தற்போது டியர் காம்ரேட் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.