பெங்களூரு
ரடங்கு நிவாரணமாக கர்நாடக அரசு ரூ.1600 கோடியை ஒதுக்கி அதில் ஆட்டோ ஓட்டுனர், முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளிகளுக்கு ரூ. 5000 அளிக்க உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு  அமலில் உள்ளது.  இதனால் பல மாநிலங்களில் வருவாய் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது  அவ்வகையில் பெரும் வருவாய் இழப்பில் தவித்து வரும் கர்நாடக அரசு கடந்த திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகளை திறந்தது. முதல் நாளில் 45 கோடி ரூபாய்க்கும் இரண்டாவது நாளில் 197 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுள்ளன.
கர்நாடகாவில் 3 மாவட்டங்கள் சிவப்பு மண்டலப் பிரிவுக்குக் கீழ் வருகின்றன. இதில் மாநிலத்தின் அதிக வருவாய் ஈட்டித் தரும் தலைநகர் பெங்களூருவும் அடங்கும். இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில்  கர்நாடக அரசு 1,600 கோடி ரூபாய் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது . இந்த நிவாரண நிதியானது விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கைத்தறி நெசவாளர்கள், பூ வளர்ப்பவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்துபவர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
முதல்வர் எடியூரப்பா இது குறித்து., ”பூ வளர்ப்பவர்களுக்கு, ஒரு ஹெக்டருக்கு 25,000 ரூபாய் நிவாரணம் கொடுக்கப்படும். துணி துவைப்பவர்கள் மற்றும் முடி திருப்பவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்கப்படும். ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்கப்பட உள்ளது. அதைப் போல்  கட்டுமானத் துறையில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாய் கொடுக்கப்படும். அவர்களுக்கு ஏற்கனவே 2,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று விவசாயிகளை மட்டுமின்றி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் நமக்கு சேவை செய்யும் முடி திருத்துபவர்கள், துணி துவைப்பவர்களையும் அதிகமாக பாதித்துள்ளது. எனவே அவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிதி உதவியால் 60,000 துணி துவைப்பவர்கள் மற்றும் 2,30,000 முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்,” என்று மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
இதைத் தவிர கைவினைப் பொருட்களை உருவாக்கும் ஊழியர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் 2,000 ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, இன்னும் இரண்டு மாதங்கள் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் பெரிய நிறுவனங்களின் மின்சாரக் கட்டணங்கள் இரண்டு மாதங்களுக்கு வசூல் செய்யப்பட மாட்டாது எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் 3 மாவட்டங்கள் சிவப்பு மண்டலப் பிரிவுக்குக் கீழ் வருகின்றன. இதில் மாநிலத்தின் அதிக வருவாய் ஈட்டித் தரும் தலைநகர் பெங்களூருவும் அடங்கும். இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன.