பெங்களூரு

ர்நாடக சட்ட அமைச்சர் மதுசாமி ஆபாசப்  படம் பார்ப்பது தேச விரோத செயல் இல்லை என தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

கடந்த 2012 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி அன்று நடந்த கர்நாடக சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒளிபரப்பப் பட்டது.  அப்போது அமைச்சராகப் பணி  புரிந்த லட்சுமண் சங்கப்பா சாவடி தனஹ்டு மொபைலில் ஒரு பெண்ணின் ஆபாசப்படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.  அதை அவர் அருகில் இருந்த மற்றொரு அமைச்சரான சி சி பாடில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையாகவே சாவடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய சாவடி கர்நாடக மாநில துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.   இதற்கு பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.   குறிப்பாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரேணுகாச்சாரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கர்நாடக மாநில சட்ட அமைச்சர் மதுசாமி, “பொதுவாக ஆபாசப்படம் பார்ப்பது தார்மீக ரீதியாக தவறுதான்.   ஆனால் அவ்வாறு ஆபாசப் படம் பார்ப்பது தேச விரோத செயல் கிடையாது.   ஆபாசப்படம் பார்த்தவர் அமைச்சராகக் கூடாது என கூறுவது அர்த்தமற்றதாகும்.   சாவடி யாரையும் ஏமாற்றவோ தேச விரோத நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை” எனத் தெரிவித்தார்.

இது பற்றிய விவாதத்தை முடிக்கத் தாம் இவ்வாறு கூறுவதாகச் சட்ட அமைச்சர் மது சாமி கூறிய போதிலும் அவருடைய இந்த விளக்கம் கர்நாடகாவில் கடும் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.   கடந்த 2012 ஆம் வருடம் சாவடி முதலில் இதற்குக் காரணம் கூறியும் சர்ச்சை அதிகரித்ததால் ஒரு வாரத்தில் பதவி விலகியது குறிப்பிடத்தக்கதாகும்.