சன்னி லியோனின் ‘கரன்ஜித் கவுர்’ வாழ்க்கை வரலாறு: சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு

சண்டிகர்:

ன்னி லியோனின் ‘கரன்ஜித் கவுர்’ வாழ்க்கை வரலாறு குறித்த இணையதள தொடருக்கு சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  சிரோன்மணி குருத்வாரா கமிட்டியும்  ஆட்சேபனை தெரிவித்து உள்ளது.

இந்திய வம்சாவழியை சேர்ந்தவரும், ஆபாச பட நடிகையுமான சன்னிலியோன் கனடா நாட்டை சேர்ந்தவர். இவர் இந்திய மொழிபடங்களில்  நடித்து வருகிறார். இவரது பூர்விகம் பஞ்சாப் மாநிலம். சன்னி லியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர். ‘கவுர்’ என்ற வார்த்தை பஞ்சாபில் புனிதமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், தனது வாழ்க்கை வரலாறு குறித்து சன்னிலியோன், கரன்ஜித் கவுர் தி அன்டோல்ட் ஸ்டோரி என்று அந்த தொடருக்கு  டைட்டில் வைத்துள்ளார். ( Karenjit Kaur: The Untold Story Of Sunny Leone)  அந்த தொடரையும் யுடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.

இந்த தொடரில் சன்னி லியோன் பிறப்பு, கல்லூரி வாழ்க்கை, ஆபாச பட நடிகை ஆனது, இந்தியாவுக்கு வந்தது, இங்கு நடிகையானது என தொடர்ச்சியாக அவரது வாழ்க்கை படமாகிறது

பொதுவாக சன்னி லியோன் தனது இயற்பெயரான கரன்ஜித் கவுர் என்ற பெயரை பயன்படுத்தாத நிலையில், அவரது வாழ்க்கை வரலாறு குறித்த தொடருக்கு கன்ஜித் கவுர் என்று வைத்திருப்பது சீக்கியர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

‘கவுர்’ என்பது சீக்கிய பெண்கள் வைத்துக் கொள்ளும் பெயர் என்று கூறி சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து பேசிய சீக்கிய அமைப்பை சேர்ந்தவர்,   சீக்கிய குருவால் சீக்கிய பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையான பெயர் கவுர் என்பதாகும்.  சீக்கிய போதனைகளை பின்பற்றாத வர்கள் யாரும் இந்த பெயரை பயன்படுத்துவதை அனுமதிக்கமுடியாது.. மீறி பயன்படுத்தினால் சீக்கிய மத உணர்வுகளை புண்படுத்துவதாக ஆகும்.

சன்னிலியோன் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்துக்கு ‘கவுர்’  என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். என்று கூறி உள்ளார்.

சன்னி லியோனின் வாழ்க்க வரலாறு குறித்த படம்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.