கண்டு கொள்ளப்படாத கார்கில் வீரர் நினைவிடம்: தந்தையே சுத்தம் செய்த அவலம்!

Kargil martyr’s father cleans up son’s ill maintained memorial

 

 

கார்கில் போரில் வீரமரணத்தைத் தழுவிய கேப்டன் கேப்டன் விக்ரம் பத்ராவின், நினைவிடத்தை அவரது தந்தையே சென்று சுத்தம் செய்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கார்கில் வீரர் விக்ரம் பத்ராவின் நினவிடம் இமாச்சல பிரதேசம் பாலாம்பூர் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பாகவே அமைந்துள்ளது. அவரது சிலையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடம், உரிய பராமரிப்பின்றி, குப்பையும், கூளமுமாகக் கிடந்துள்ளது. இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத விக்ரம் பத்ராவின் தந்தை எல்.ஜி பத்ரா, தாமே சென்று அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி உள்ளார். இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

 

கார்கில் போர் நினைவு தினங்களில் மட்டுமே, அதில் உயிரிழந்த வீரர்களை நினைப்பதும், மரியாதை செலுத்துவதும் போதாது என்று வேதனை தெரிவித்துள்ளார் கேப்டன் விக்ரம் பத்ராவின் தந்தை எல்.ஜி.பத்ரா. போர் வீரர்களின் தியாகம் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றால், அவர்களது நினைவிடங்களை அதிகாரிகள் சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், பாலாம்பூர் நகராட்சி அதிகாரிகளோ, மோசமான வானிலையே கார்கில் வீரரின் நினைவிடம் அப்படிக் காணப்படுவதற்கு காரணம் என விளக்கமளித்துள்ளனர். இதற்குப் பிறகாவது அதிகாரிகள் அந்த இடத்தை சுத்தப்படுத்தி, நல்ல முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைத்தபாடில்லை.

Leave a Reply

Your email address will not be published.