சாத்வி பிரக்ஞா குற்றச்சாட்டு : ஹேமந்த் கர்கரே மகள் பதில்

மும்பை

சாத்வி பிரக்ஞா தாகுர் குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவில் வசிக்கும் ஹேமந்த் கர்கரேவின் மூத்த மகள் ஜுயி நவாரே பதில் அளித்துள்ளார்.

மும்பை காவல்துறை உயர் அதிகாரியான ஹேமந்த் கர்கரே தீவிரவாத எதிர்ப்பு படையில் பணி புரிந்து வந்தார். இவர் கடந்த் 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்ஞா தாகுருக்கு தொடர்புள்ளதை துப்பறிந்து அவரை கைது செய்தார். அதன் பிறகு ந்டந்த 26/11 மும்பை தாக்குதலில் கர்கரே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் அவர் மறைவுக்கு நாடே வருந்தியது.

சிறையில் இருந்த சாத்வி பிரக்ஞா தாகுர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். அவர் பாஜகவால் போபால் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சாத்வி ஒரு பேட்டியில் தம்மை ஹேமந்த் கர்கரே கைது செய்து கொடுமை படுத்தியதால் தாம் அவருக்கு சாபம் அளித்ததாகவும் அந்த சாபத்தினால் அவரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்று விட்டதாகவும் கூறினார்.

சாத்வியின் இந்த புகார் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. நாட்டுக்காக உயிர் நீத்தவரை சாபத்தால் மரணம் அடைந்தார் என கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை ஒட்டி தனது புகாருக்கு சாத்வி பிரக்ஞா மன்னிப்பு கேட்டார். அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

மறைந்த ஹேமந்த் கர்கரேவின் மூத்த மகள் ஜுயி நவாரே தற்போது திருமணமாகி தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஜுயி செய்தியாளர்களிடம்,”எனது தந்தை ஹேமத் கர்கரேவை பற்றி சாத்வி பிரக்ஞா குற்றம் சாட்டியதை செய்தித் தாள்களில் படித்தேன். இது குறித்து நான் அவரை தவறாக நினைக்கவில்லை.

ஜுயி நவாரே

நான் எனது தந்தையை பற்றி மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர் தனது கட்மையை ஒழுஙாக செய்து மற்ற அதிகாரிகளுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியவர் அவார். அவர் எங்களுக்கு தீவிரவாதத்துகு என தனி மதம் இல்லை என்பதை கற்பித்துள்ளார். எந்த மதமும் மற்றவரை கொல்ல வேண்டும் என போதிக்கவில்லை. அவர்தனது 24 வருட காவல்துறை பணியில் தனது கொள்கையில் இருந்து என்றும் மாறியதில்லை.

தனது இறப்பின் மூலம் என் தந்தை மும்பை நகரையும் இந்த நாட்டையும் காக்க முயன்றுள்ளார். அவர் தனது பணியை விரும்பிச் செய்து எங்களுக்காக அவருடைய சீருடையை மட்டும் விட்டுச் சென்றுள்ளார். அவருடைய கடமையை தனது வாழ்நாளில் திறமையாக செய்துள்ளார். நான் அனைவரும் அவரை என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி