ரூ.1,400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனை!

ரூ.1400 கோடி சொத்துக்கு அதிபதியான உலகின் பணக்கார பூனை ஜெர்மனியில் உள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் தன் செல்லப்பிராணி பூனை மீது அதீத வைத்த பாசத்தின் விளையால் தன் சொத்தை அதன் மீது எழுதி வைத்துள்ளார்.

richest

ஜெர்மனியை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெட் தன் வீட்டில் சௌபீட் என்ற பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். அந்த பூனை மீது கார்ல் அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தார். அதன் மீதான பாசத்தின் மிகுதியால் தன் செல்லப்பிராணியான சௌபீட்டை திருமணம் செய்துக் கொள்ள தராயாக இருப்பதாக ஒருமுறை கார்ல் நகைச்சுவையாக கூறியிருந்தார்.

அந்த அளவிற்கு பூனை மீது பாசம் வைத்திருந்த கார்ல் தான் இறப்பதற்கு முன்பு தன் சொத்தொன் ஒரு பகுதியை சுமார் ரூ.1,400 கோடியை சௌபீட் மீது எழுதி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து கார்ல் கடந்த 19ம் தேதி உயிரிழந்தார். கார்லின் இறப்பை தொடர்ந்து அவருக்கு சொந்தமான சொத்து விவரங்கள் குறித்து ஆராயப்பட்டது.

karl

அப்போது தன் செல்லப்பிராணி சௌபீட் மீது ரூ.1400 கோடியை கார்ல் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. தான் உயிருடன் இருக்கும் வரை தனது செல்லப்பிராணியை பாதுகாத்து வந்த கார்ல் லாகர்ஃபெட் தனது மறைவிற்கு பின்னர் அதேபோல் கண்ணும் கருத்துமாக வாழ வேண்டும் என்னும் ஆசையில் அதன் மீது தன் கோடிக்கணக்கான சொத்தை எழுதி வைத்துள்ளார்.

ஒரு பூனை மோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியான அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.