‘கர்ணன்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு….!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் மழை பெய்து வருகிறது.

ஏப்ரல் 9-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது கர்ணன்.

இந்நிலையில் கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

5 நிமிடங்கள் கால அளவு கொண்ட அந்த வீடியோவில் கர்ணன் உருவான விதத்தை காட்சிகளாக விவரித்துள்ளது படக்குழு. மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷ் தொடங்கி தனது கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் எப்படி துல்லியமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்களிடம் நடித்துக் காட்டி மெனக்கெட்டிருப்பது தெரிய வருகிறது.