சென்னை: கடத்தப்பட்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் மீட்கப்பட்டுள்ளார். அவரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக  காரில்  கடத்தியபோது பதிவான சிசிடிவி காட்சிகள்  வெளியாகி உள்ளது.

தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளராக இருப்பவர் கர்ணன். இவர் இன்று காலை 11 மணியளவில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அன்சாரி வீதியிலுள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்தார்.

அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அலுவலகத்திற்குள்  நுழைந்து, கர்ணனை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று, காரில் ஏற்றி  கடத்தி சென்றனர். அது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.

பட்டப்பகலில், எம்எல்ஏ உதவியாளரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்த  உடுமலை டி.எஸ்.பி.,ரவிக்குமார் அதிரடி விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கர்ணனை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கடத்தியவர்கள் யார், எதற்காக கடத்தினர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடத்தியவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டது.  பொள்ளாச்சி-திருப்பூர் நெடுஞ்சாலையில் உள்பட மாவட்டம் முழுவதும் காவல்துறை அலர்ட் செய்யப்பட்டு, நெடுஞ்சாலைகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.  சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார்  சோதனை செய்தனர்

இந்த நிலையில்,  கடத்தப்பட்ட கர்ணன்,  திருமூர்த்தி அணைக்கு அருகிலுள்ள தளி அருகே உள்ள வாளவாடி என்னும் பகுதியில் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,   கர்ணன் கடத்தப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில்,  நான்கு பேர் அவரை இழுத்து வந்து, கட்டிடத்திற்கு வெளியே காத்திருக்கும் காரில் கட்டாயப்படுத்தி ஏற்றி அழைத்துச்செல்வது தெரிய வந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=bmtgY0rNj5s&feature=youtu.be