கர்நாடகா : 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு

சன்

ர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன  தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஜூன் 25 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.  இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் கலந்துக் கொண்டு தேர்வு எழுதி வருகின்றனர்.

இதில் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஆர்கல்குட் வட்டத்தில் அமைந்துள்ள மல்லபட்னா என்னும் ஊரில் அரசு பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.   இந்த தேர்வை எழுதும் மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  அப்போது அவர் கணித தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்.  மதியம் 1.30 மணிக்குத் தேர்வு முடியும்வரை அதிகாரிகள் காத்திருந்து அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

கொரோனா பாதிப்பு உறுதியான மாணவர் தேர்வு எழுதிய அறையில் மொத்தம் 19 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர்.  அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.   இந்த மாணவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளதால் அவர் உடல் நலம் தேறியபிறகு மீண்டும் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார் எனக் கர்நாடக மாநில பொதுத் தகவல் ஆணையர் ஜகதீஷ் தெரிவித்துள்ளார்.

You may have missed