கர்நாடகா:

ணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 145 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டிடியூட் உள்ள கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 299 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து உடுப்பி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் சுதிர் சந்திர சூதா தெரிவிக்கையில், கொரோனா பாதிப்புக்குள்ளான, 5,800 மாணவர்கள் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் 59 பேர் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, மார்ச் 18 அன்று உடுப்பி நிர்வாகத்தால் இந்த வளாகம் ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்றார்.

மாவட்ட சுகாதார அதிகாரி கூறுகையில், “மார்ச் 17 அன்று உடுப்பி மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் 27 பேர் எம்ஐடியைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான மாணவர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கொரோனா நோயாளிகளுடனான சில முதல் தொடர்புகளும் இருந்துள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து எம்ஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஐடி மணிப்பால் வளாகம் உட்பட உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் திடீரென கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், இதை கட்டுபடுத்த உடுப்பி மாவட்ட நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், எம்ஐடி வளாகத்தின் ஆசிரிய மற்றும் அத்தியாவசிய ஊழியர்கள் அனைவரும் சரியான பாஸ் / அடையாளத்துடன் வளாகத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.