நிரம்பிய கர்நாடக அணைகள்: 20ந்தேதி முதல்வர் குமாரசாமி ஆய்வு

--

பெங்களூரு:

ர்நாடகாவில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு தமிழகம் வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நிரம்பி உள்ள கர்நாடக அணைகளை பார்வையிட முதல்வர் குமாரசாமி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.வரும் 20ந்தேதி அணைகளை பார்வையிட்டு பூஜை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக  கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவை குறைத்திருப்பதாக கூறப்படுகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்,  கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கனஅடி ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கபிணி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 40,000 கனஅடி ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த  அணைகளையும் நாளை மறுதினம் (20-ம் தேதி) கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி நேரில் பார்வையிட்டு, பூஜை மற்றும் ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கே.ஆர்.எஸ். மற்றும் கபிணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி யுள்ளதால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும், இதற்காக  சிறப்பு பூஜை செய்ய கர்நாடக முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வீடியோ….

https://youtu.be/R7yTpKlx3mk