பெங்களூரு: கொரோனா சிகிச்சைக்காக தங்களது பிளாஸ்மாவை தானம் செய்யும் நபருக்கு தலா ரூ. 5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவை குணப்படுத்த இதுவரை தனி மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆகையால் கூட்டு மருந்து தான் சிகிச்சையாக தரப்படுகிறது. அதே நேரத்தில் பிளாஸ்மா சிகிச்சை சிறந்த பலனை தருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா தானம் தரும் நபர்களுக்கு ரூ. 5,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று கர்நாடகா சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
எனவே பிளாஸ்மா தானம் விரும்புவர்கள் தாமாக முன் வருவார்கள். நோயாளிகளுக்கு அதனால் பலன் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.