டில்லி:

ர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி மே 12ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் இன்று காலைவ 11 மணி அளவில் தேர்தல் தேதியை அறிவித்தார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில், தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 28ந்தேதியுடன் முடிவடைய இருப்பதால், இன்று தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

மே 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதி முறைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

வாக்குச்சீட்டுக்கள் மாநில மொழியிலும் (கன்னடம்) அச்சடிக்கப்படும்.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், ஒப்புகை சீட்டுடன் இவிஎம் இயந்திரம் பொருத்தப்படும்.

கர்நாடகாவில், 4.96  கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள்: மே 12ந்தேதி

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்:  மே 15ந்தேதி

தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் :  ஏப்ரல் 17ந்தேதி

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் :  ஏப்ரல் 24ந்தேதி