கர்நாடக சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

பெங்களூரு:

ர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு சரியாக  காலை 7  மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலையிலேயே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள்  தங்கள் வாக்குகளை பதிவு செய்ய காத்திருந்தனர்.

224 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில்,  222 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இன்று வாக்குப்பதிவையொட்டி, மாநில முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்து.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் கடந்த 4-ந் தேதி காலமானார். இதனால் அத்தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை. அதுபோல  ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் பாஜ வேட்பாளருக்கு சொந்தமான வீட்டில் வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன. அத்தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மே 28-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  222 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. மாநிலம் முழுவதம் மொத்தம் 4,96,82,357 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 2,52,05,820 பேர் ஆண் வாக்களர்கள்; 2,44,71,979 பேர் பெண் வாக்காளர்கள். 4,552 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள்.

அதுபோல வாக்களர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 56,696 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் 1469 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றம் மிக்கவையாக கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 50 ஆயிரமும் பேரும், மாநில போலீசார் 1லட்சம் பேரும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

மதுபானக் கடைகளை நாளை வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி