பெங்களூரு

கர்னாடகா சட்டசபையில் மூட நம்பிக்கை எதிர்ப்பு சட்ட மசோதா வெகு நாட்களாக அமுலுக்கு வராமல் இருந்து வந்தது.   அந்த மசோதாவை பா ஜ க கடுமை ஆக எதிர்த்து வந்தது.   அதில் குறிப்பிட்ட பல நம்பிக்கைகளில்  பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருண்டால் புண்ணியம் என்பதும் ஒன்றாகும்   இந்த மசோதாவை இந்துக்களுக்கு எதிரானது என பா ஜ க கடுமையாக எதிர்த்து வந்தது.   இன்று பா ஜ க வின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் அமுலாக்கப் பட்டது.

இதில் 16 நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.   அவை

1.       பேய் ஓட்டுதல், சூனியம், நரபலி, மனோவசியம், மற்றும் கெட்ட மந்திர நடவடிக்கைகள்

2.       தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொள்ளும் வேண்டுதல்கள்

3.       சிறு குழந்தைகளை ஆணிப் படுக்கையில் வீசி எறிதல்

4.       பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்தல்

5.       அனைவர் முன்னிலையில் பாலியல் செய்கைகளை செய்ய சொல்லுதல்

6.       மிருகங்களை கழுத்டை அறுத்துக் கொல்லுதல்

7.       அலகு குத்திக் கொள்ளுதல்

8.       மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதை தடுப்பது

மேற்கூறிய குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் இதை செய்வோருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சமாக ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என அந்தச் சட்டம் கூறுகிறது.