பெங்களூரு:

சித்தராமையா அரசு மீது பிரதமர் மோடி ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இதற்கு ராகுல்காந்தி இன்று நடந்த பிரச்சாரத்தில் பதிலளித்து பேசுகையில், ‘‘மோடி இங்கே ஊழல் குறித்து பேசியுள்ளார். பிரதமருக்கு தெரிந்த நிரவ்மோடி ரூ.30 ஆயிரம் கோடியுடன் நாட்டை விட்டு ஓடிவிட்டார். இது குறித்து அவர் வாய்திறக்கவில்லை.

அவரது மேடையில் எடியூரப்பா இருக்கிறார். இவர் ஊழல் வழக்கில் சிறை சென்றவர். மறுபுறத்தில் சிறை சென்ற 4 பேரை அருகில் வைத்துக் கொண்டு மோடி ஊழல் குறித்து பேசுகிறார். சித்தராமையா அரசை 10 சதவீத கமிஷன் அரசு என்று மோடி தெரிவித்துள்ளார். இத குறித்து அவர் யாருடைய பெயரையும் வெளியிடவில்லை. ஆனால் சட்டமன்ற தேர்தலில் 8 ஊழல்வாதிகளுக்கு மோடி போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார். இது உண்மை’’ என்றார்.

ஊழல் வழக்கில் சிறை சென்ற ரெட்டி சகோதரர்களை குறிப்பிட்டு ராகுல்காந்தி இவ்வாறு தெரிவித்தார்.