கர்நாடகா: குழந்தை பெற்ற  5ம் வகுப்பு பள்ளி மாணவி!

சாம்ராஜ்நகர்:

ர்நாடகாவில் ரெசிடன்சி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்தாள். இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5old girl

கர்நாடகமாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ரெசிடன்சி பள்ளியில் மலைவாழ் ஆதிவாசி பிரிவை சேர்ந்த மாணவி ஒருவர் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் பள்ளி ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் அந்த மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் ஆகும் வரை மாணவியின் உடலில் எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை. இதனால் அவர் கர்ப்பமாக இருந்ததும் யாருக்கும் தெரியவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். கடந்த  25ம் தேதி அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் கூறும்போது, குழந்தை பெற்ற இந்த 5-ஆம் வகுப்பு மாணவி பள்ளியை விட்டு நின்றுவிட்டதாகவும், பின்னர் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் படிக்க வந்தார் என்றார்.

குழந்தைக்கு தந்தை யார் என்று  அந்த மாணவியிடம் என்று கேட்டதற்கு,  அவரது சொந்த மாமாதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.