கர்நாடக பந்த் பீதியால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முடக்கம் இன்று  மாலை நேர விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகளும்  காலையிலேயே ஏர்போர்ட்டில் குவிந்தனர்.  இதனால் பெங்களுர் விமான நிலையமும் பஸ் நிலையம் போல பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது
தமிழ்நாடு அரசுக்கு எதிரான பந்த்தாக இல்லாமல், சில அமைப்புகள் இதை தமிழர்களுக்கு எதிரான பந்த்தாக மாற்றியுள்ளனர். கேபிள் டிவி சேனல்கள் கட் செய்யப்பட்டுள்ளன, அதேபோல தமிழ் செய்தித்தாள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.  பெங்களூரில் தமிழ் நாளிதழ்களை கன்னட வெறியிர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
தினத்தந்தி, தினமணி உள்ளிட்ட 5 தமிழ் பத்திரிகைகள் பெங்களூரில் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். அவற்றை இன்று ஏஜென்சிகள் வினியோகம் செய்யாமல் போராட்டம் நடத்திவருகின்றன.
சில இடங்களில் அதிகாலையில் வந்த செய்தித்தாள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதன் மூலம் தமிழர்கள் தங்கள் மாநிலத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வையும், அறிந்து கொள்ளக்கூடாது என முடக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் கண்டும் காணாததுபோல செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
இதுகுறித்து கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பத்திரிகை ஏஜென்ட் ஒருவர், செய்தித்தாள் மட்டுமல்ல, காவிரிக்காக உயிரையும் கொடுத்து போராடுவோம் என்றார்.
தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூரிலேயே முடங்கி உள்ளன.
1bandh
பள்ளி கல்லூரிகளுக்கு  அரசே  விடுமுறை அறிவித்துள்ளது.
 
பெங்களூரில் ஆட்டோக்கள், டாக்சிகள் லாரிகள் தனியார் பஸ்கள், மாநகர போக்குவரத்துக் கழக பஸ்கள் மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் உள்ளிட்டவைகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேவனஹள்ளி விமான நிலையத்தில் இயங்கும் டாக்சி டிரைவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
மேலும் சிறிய கடைகள் தொடங்கி பெரிய வணிக வளாகங்கள் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளும் கூட பந்தில் பங்கேற்கும் வகையில் மூடப்பட்டுள்ளது.
நாளை பந்த் காரணமாக மாநிலத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீசாருடன் ஊர்க்காவல் படையின் மற்றும் துணை இராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநில அரசு கூறுகிறது. ஆனால் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பாதுகாப்பாகவே செல்வது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தமிழகத்தில் பதிவு செய்துள்ள வாகனங்களை வெளியேற்ற வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒசூர் அருகே அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் செய்து வருகின்றனர்.
ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்தை கழுதைக்கு அணிவித்து ஊர்வலமாக சென்று அநாரிக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவ பொம்மைகள் எரிக்கப்படுகிறது. அவரது படத்துக்கு வாட்டாள் நாகராஜ் தீயிட்டு கொளுத்தினார்.
கர்நாடக போலீசார் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.