கர்நாடகாவில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை: அரசு அதிரடி நடவடிக்கை

--

பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மீறி புகைப்பிடிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்து உள்ளது.

இதுகுறித்து, கர்நாடகாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட ஹோட்டல்கள், விடுதிகள், பார்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்க சுற்றறிக்கை ஒன்றை அரசாங்கம் வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலஅரசு நவம்பர் 17-ம் தேதி வெளியிட்ட,  சுற்றறிக்கையின்படி, மாநிலத்தில் புகைப்பிடிக்கும் பகுதிகள், முறையான அரசாங்க அனுமதி பெற்ற பின்னரே அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, புகைப்பிடிக்கும் பகுதிகளில் சிகரெட் மற்றும் பிற புகையிலை தயாரிப்பு சட்டத்தின் படி அறைகலன்கள், நாற்காலிகள், உட்கார இடங்கள் அல்லது திரைச்சீலைகளை கூட வழங்க கூடாது, என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், “இந்த நிறுவனங்களில் ஏதேனும் விதிகள் மீறினால், அதன் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்,” என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக  கர்நாடக அரசு பெங்களூரில் முன்னோடித் திட்டத்தைத் துவக்கி உள்ளது. அதன்படி அனைத்து பொது இடங்களையும் புகை-இல்லாத மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.