கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.வின் தேன்பொறி (செக்ஸ்) வீடியோ! சமூக வலைதளங்களில் வைரல்

பெங்களூரு:

ர்நாடக பாஜக எம்.எல்.ஏ.வின் பாலியல் தொடர்பான தேன் பொறி வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, அந்த சட்டமன்ற உறுப்பினரே காவல்தறையில் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.வின் தேன்பொறி வீடியோ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த, அந்த எம்எல்ஏ, தனக்கு  குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து  அச்சுறுத்தல்கள் வருவதாக தானே சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கடாக் மாவட்டம் சேர்ந்த பாஜக எம்எல்ஏ  கலகப்ப பண்டி. இவரின் செக்ஸ் வீடியோ, தென்பொறி என்ற பெயரில் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, கடந்த 2017ம் ஆண்டு  பிப்ரவரி 25, 2017 அன்று பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எம்எல்ஏவின் புகாரின் பேரில் மத்திய கிரைம்பிராஞ்ச் காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், இந்த வீடியோ தொடர்பாக  ராகவேந்திர மற்றும் ஒரு பெண்ணையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளியான  ராகவேந்திரா, சில பெண்களைக் கொண்டு,  சட்டமன்ற உறுப்பினர்களையும், பிரபலங்களையும் மடக்கி, அவர்களுக்கு செக்ஸ் ஆசை காட்டி, அவர்களின் வலையில் விழ  வைத்து, அவர்களின் உறவுகளை வீடியோ எடுத்து அவ்வப்போது மிரட்டி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவுக்கு தேன் பொறி என்று பெயர் வைத்துள்ள ராகவேந்திரா, மற்றவர்களைப் போல பாஜக எம்எல்ஏ கலக்கப்ப பண்டியின் செக்ஸ் லீலைகளையும் வீடியோ எடுத்து, பெரும் தொகைக்கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்தைத்தொடர்ந்து, அவரது வீடியோவை எம்எல்ஏவின் தென் பொறி செக்ஸ் என்ற பெயரில் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ராகவேந்திராவிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து ஒரு பெண் டிரைவ் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

குற்றவாளி ராகவேந்திரா இதுபோல மேலும் 5பேரை இதுபோன்ற செக்ஸ் வலைக்குள் சிக்க வைத்து மிரட்டி பணம் சம்பாதித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரபலமானவர்களை நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் ராகவேந்திர,  பல அரசியல்வாதி களுடன் நண்பராக பழகி, அவர்களிடம் சில  இளம் பெண்களின் படங்களைக் காட்டினார், அவர்களுக்கு செக்ஸ் ஆசை காட்டி, தனது தேன்பொறியில் சிக்க வைத்து, பிளாக் மெயில் செய்துவந்ததும் அம்பலமாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி