4 ஆவது முறை: கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா

பெங்களூரு:

ர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

எடியூரப்பா  4வது முறையாக கர்நாடக முதலமைச்சராக இன்று மாலை  பதவியேற்றுள்ளார். அவர் இந்த மாதம் 31ந்தேதிக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.

இன்று மாலை 6 மணி அளவில் கவர்னர் மாளிகையில் எளிய முறையில் முதல்வராக எடியூரப்பா கடவுளின் மீது சத்தியம் செய்து பதவியேற்றார்.