கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் ம.ஜ.த. நான்கு தொகுதிகளில் வெற்றி

ர்நாடகாவின் மூன்று பாராளுமன்ற மற்றும்  இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் ம.த.ஜ. கூட்டணி நான்கு இடங்களை வென்றுள்ளது.

கர்நாடகாவில் காலியாக இருந்த, ஷிவமொகா, பல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று பாராளுமன்ற தொகுதிகள் மற்றும், ராம் நகர், ஜமகண்டி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள், யாருக்கு ஓட்டு போட்டோம் என்று உறுதி செய்யும் இயந்திரங்கள், ‘சீல்’ வைக்கப்பட்டன. பிறகு, அந்தந்த ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

இதில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் மாண்டியா, ராம்நகரா தொகுதிகளையும், காங்கிரஸ் பெல்லாரி, ஜாம்கண்டி தொகுதியையும் பிடித்தது. சிவமோகாவில் பா.ஜ., தன்வசம் தக்கவைத்துக் கொண்டது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.