கர்நாடக இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது

--

பெங்களூரு:

ர்நாடகத்தில் 3 மக்களவை, 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் காலியாக இருந்த சிவமொக்கா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகள் மற்றும் ராம்நகர், ஜம்கண்டி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும்  இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

ராம்நகர் தொகுதியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி, மதசார் பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சந்திரசேகர், திடீரென பாஜகவில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தல் ஆளுங்கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.