கர்நாடக இடைத்தேர்தல்: குடும்பத்தினருடன் வாக்களித்த எடியூரப்பா

பெங்களூரு:

ர்நாடகாவில் இன்று 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் சிமோகா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், எடியூரப்பா  இன்று காலை தனது மகனுடன் குச்சாரியா கோவிலுக்கு சென்று, தனது மகன் வெற்றி பெற வேண்டி விசேஷ பூஜை நடத்தி சாமி கும்பிட்டார்.

அதைத்தொடர்ந்து  குடுபத்தினருடன் சென்று தனது மகனுக்கு  வாக்களித்தார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த எடியூரப்பா,  சிமோகா தொகுதியில் தனது மகன் 101 சதவிகிதம் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார். மேலும், பெல்லாரி ஜம்கண்டி தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.