கர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி!

கொள்ளேகால்,

ர்நாடகாவில் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தொகுதிகளை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது.

நஞ்சன்கூடு,குண்டலுபேட்டையில் தொகுதிகளில் கடந்த 9–ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசின் கை ஓங்கியே இருந்தது.  தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அடுத்த ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கர்நாடகாவில் பாரதியஜனதா மீண்டும் காலூன்ற முயன்று வருகிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று இரண்டு தொகுதிகளையும் மீண்டும் தக்க வைத்துக்கொண்டது.

ஆனால், மற்ற மாநிலங்களான டில்லி, அசாம், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற 10 தொகுதிகளுக்கதான இடைத்தேர்தலில் பாரதியஜனதா அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Karnataka by-elections: Congress wins!, கர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி!
-=-