கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி!!

கர்நாடகாவில் மூன்று மக்களவை மற்றும் இரண்டு பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவாக வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட முடிவில் பெல்லரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா, மாண்டியா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளாம் வேட்பாளர் சிவராம கவுடா வெற்றிப்பெற்றுள்ளனர்.

karnatakaresults

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை மற்றும் ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 பேரவை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது.

ஷிவமொக்கா தொகுதியில் பாஜ சார்பில் மாநில தலைவர் எடியூரப்பாவின் மகன் பி.எஸ்.ஒய். ராகவேந்திரா, ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மஹிமாபட்டேல், ராம்நகரம் சட்டபேரவை தொகுதியில் மஜத வேட்பாளராக முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி உள்பட பலர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பாராளுமன்ற தொகுதிகளான சிவமோகாவில் 61.5 சதவீதம், பெல்லாரியில் 63.85 சதவீதம், மாண்டியாவில் 53.93 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல், சட்டசபை இடைத் தேர்தலை சந்தித்த ராமநகரில் 73.71 சதவீதமும், ஜம்கண்டியில் 81.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அந்தந்த வாக்கு எண்ணும் மையத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 14 முதல் 18 சுற்றுகள் வாக்கு எண்ணப்படுகிறது.

பெல்லாரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா பாஜக வேட்பாளர் சாந்தாவைவிட 2லட்சம் வாக்குகள் முன்னிலை வகித்து வெற்றிப்பெற்றுள்ளார். அதேபோல், மாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் சிவராம கவுடா 3லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.

ஜமகண்டி பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா முன்னிலை வகிக்கிறார். ஷிமோகா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ராகவேந்திராவும் முன்னிலை வகித்து வருகிறார். இருப்பினும் பிற்பகலுக்குள் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார் என்பது தெரியவரும்.

மக்களவைக்கு இன்னும் 6 மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், கர்நாடகாவில் 3 மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவு மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளது, இந்த முடிவுகள் மக்களவை தேர்தலில் பிரதிபலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.