கர்நாடக இடைதேர்தல்: ராம்நகர் தொகுதி வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு….(வீடியோ)

பெங்களூரு:

ர்நாடக இடைதேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மனைவி போட்டியிடும் ராம்நகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்தல் சற்று நேரம் நிறுத்தப்பட்டு, மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

கர்நாடகாவில் காலியாக இருந்த சிவமோ, பெல்லாரி, மாண்டியா  மக்களவைத் தொகுதிகள் மற்றும் ராம்நகர், ஜம்கண்டி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும்  இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

ராம்நகர் தொகுதியில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் வேட்பாளராக முதல்வர் குமாரசாமி யின் மனைவி அனிதா போட்டியிடுகிறார். இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ராம்நகர் தொகுதிக்கு உள்பட்ட மொட்டிடோடி என்ற பகுதியில் வாக்கு சாவடி எண்-79-ல் திடீரென பாம்பு புகுந்தது. இதன் காரணமாக வாக்களிக்க வந்தவர்கள், வாக்குச்சாவடி அலுவலகர்கள் உடனே அங்கிருந்து பயந்தடித்துக்கொண்டு ஒடினர்.

இதன் காரணமாக அந்த வாக்குச்சவாடியில் பரபரப்பு நிலவியது. உடடினயாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தசம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி: ANI

பாம்பு அகற்றப்படும் வீடியோ

Leave a Reply

Your email address will not be published.