பதவி ஏற்று 100வது நாள்: ராகுல்காந்தியுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு

டில்லி:

ர்நாடக ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வராக பதவி ஏற்றுள்ள குமாரசாமியின் ஆட்சி 100வது நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தியை இன்று காலை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது குமாரசாமிக்கு ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் –  ஜேடிஎஸ் (JDS) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, ஜேடிஎஸ் வேட்பாளர் குமாரசாமி கடந்த மே மாதம் 23 ம் தேதிமுதலமைச்சராக  பதவி ஏற்றார்.

இந்நிலையில், கர்நாடகா முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்களை கடந்துள்ளார் கர்நாடக முதலவர் குமாரசாமி. இதை தொடர்ந்து, அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, “இன்றுடன் நான் முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களாகிறது. அதனால் தான் நான் இங்கு வந்து ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தேன். ராகுல் காந்திக்கு கர்நாடகாவில் நடக்கும் ஆட்சி முறை மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், எங்களுடைய அரசாங்ம் நன்கு செயலாற்றவும், சுமுகமாகவும் இருக்கிறது” என்று செய்தியாளர்களிடம் குமாரசாமி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, கர்நாடக முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா சமீபத்தில் பேசும் போது,  மக்களின் ஆசி கிடைத்தால் மீண்டும் கர்நாடக முதல்வராவேன் என்று கூறினார். இது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை உருவாக்கியது. இதுகுறித்தும் ராகுல்காந்தியுடன்  குமாரசாமி புகார் கூறியிருப்பபதாகவும்  டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Karnataka Chief Minister HD Kumaraswamy met Congress President Rahul Gandhi earlier today in Delhi., பதவி ஏற்று 100வது நாள்: ராகுல்காந்தியுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு
-=-