பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கூறிய முதல்வர் குமாரசாமி, அதற்கான நேரத்தை ஒதுக்கும்படி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துதார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், ஆட்சிக்கு எதிராக  காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 13 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த கடிதம் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காத நிலையில், உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.  இன்னும் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், இன்று ஏற்கனவே அறிவித்தபடி சட்டமன்ற கூட்டம் தொடங்கியது.

சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, தற்போதைய அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும்,  அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளவதற்காக நான் இங்கு இல்லை என்று கூறியவர்,  இந்த அமர்வில் பெரும்பான்மையை நிரூபிக்க உங்கள் அனுமதியையும் நேரத்தையும் நான் கோருகிறேன் என்று பேசினார்.

ஆட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்கும் வகையில், நம்பிக்கை வாக்கெடுப்பதை நடத்துங்கள் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.