காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் திடீர் உத்தரவு

பெங்களூரு:

காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக முதல்வர் குமாரசாமி  திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவிரியில் இந்த மாதத்திற்கான 31 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில்,  காவிரியில் இருந்து, தமிழகத் திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறந்து விடும்படி  கர்நாடக நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணை யத்தின் முதல்கூட்டம் கடந்த 2ந்தேதி டில்லியில் நடைபெற்றது. அதில் எடுக்கப் பட்ட முடிவின்படி தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்காக கர்நாடகம் 34 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்றும், ஆனால், கர்நாடகா ஜூன் மாதம் 3 டிஎம்சி உபரி நீர் வழங்கியுள்ளதால் ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கனமைழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக அங்கிருந்து 35ஆயிரம் கனஅடி  உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரியில் தண்ணீர் திறந்து விட அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 38,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

You may have missed