தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து விமானங்கள் இயக்க தடை

பெங்களூர்:
மிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பரவியுள்ள கொரோனா வைரசிற்கு இதுவரை 2418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் பலியாகியுள்ளனர். அம்மாநில அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதா சட்டமன்ற வளாகத்தில் எடியூரப்பா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விமான சேவை மட்டும் அல்லாமல் மேற்கொண்ட 5 மாநிலங்களில் இருந்து சாலை மார்க்கமாக ரயில் மார்க்கமாக பொதுமக்கள் கர்நாடக மாநிலத்திற்கு நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 15 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக மேற்கொண்ட 5 மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு பொதுமக்கள் சாலை மார்க்கமாக நுழைய தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.