எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது! மத்தியஅரசு மீது கர்நாடக முதல்வர் குற்றச்சாட்டு!

பெங்களூரு,

எனது தொலைபேசி உரையாடல் மத்திய அரசால் ஒட்டு கேட்கப்படுகிறது என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்.

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதாவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும் மும்முரமாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் தொலை பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது தொலை பேசி உரையாடல்கள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்பட்டு வருவதாக கூறி உள்ளார்.

மேலும், நாங்கள்யாருடையதொலைபேசிஉரையாடலையும்ஒட்டு கேட்பத்தில். அந்த அளவுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு தரம் தாழ்ந்துவிட வில்லை என்றார். அதே நேரத்தில்மத்தியஅரசுதான்என்தொலைபேசிஉரையாடலைஒட்டுகேட்கிறது.

இவ்வாறுஅவர்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.