கர்நாடக முதல்வரின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி : மகனுக்கு இல்லை

பெங்களூரு

ர்நாடக முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து அவருடைய மகளுக்கும் கொரோனா உறுதி ஆகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நேற்று வரை 1.34 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சுமார் 2500 பேர் உயிர் இஅந்துள்ளன்ர்.  இதுவரை 58000 பேர் குணம் அடைந்து தற்போது 74000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   பெங்களூருவில் மட்டும் சுமார் 60000 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் கர்நாடகாவில் ஊரடங்கை ரத்து செய்தது தெரிந்ததே.  அதன் பிறகு கர்நாடகாவில் தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் இன்று முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை டிவிட்டர் மூலம் அவர் அறிவித்தார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து அவரது மகள் பத்மாவதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா  பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி