சித்தராமையாவை மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்த எடியூரப்பா

பெங்களூரு:

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் முதல்வர்  சித்தராமையாவை, கர்நாடக பாஜக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, தனது சட்ட மன்ற கட்சித்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை பெங்களூரு வில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா மற்றும் சக அமைச்சர்கள்  கே.எஸ். ஈஸ்வரப்பா, பசவராஜ் பொம்மாய் ஆகியோர்,  மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BSYediurappa, Eshwarappa, Karnataka CM, Karnataka CM BSY, Siddaramaiah i, Siddaramaiah in hospital, Yediurappa
-=-