தனது பெயரின் எழுத்துக்களை மாற்றிய எடியூரப்பா

பெங்களூரு

ர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள எடியூரப்பா தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை மாற்றி உள்ளார்

கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலகினார்கள்.  இதனால் பெரும்பான்மை இழந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது.  இதில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன.  முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்தார்.

அதையடுத்து பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது.   ஆளுநர் அனுமதியின் பேரில் பாஜக தலைவர் எடியூரப்பா இன்று மாலை முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.  இது குறித்து அவர் அமித்ஷாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை மாற்றி அமைத்துள்ளார்.

எடியூரப்பா என்பதை அவர் ஆங்கிலத்தி YEDDYURAPPA என எழுதி வந்தார்.  இந்த கடிதத்தில் அவர் YEDIYURAPPA என மாற்றி உள்ளார்.  இதற்கு நியுமராலஜி காரணம் எனக் கூறப்படுகிறது.   சட்டப்பேரவையில் எடியூரப்பா அறையின் பெயர் பலகையிலும் இந்த புதிய எழுத்துக்களுடன் போர்ட் வைக்கபட்டுள்ளது.

கடந்த 1980 களில் அவருடைய பெயர் Yediyurappa என்றே இருந்தது.  கடந்த 2000 களின் பிற்பகுதியில் அவர் தனது பெயரை Yeddyurappa என மாற்றிக் கொண்டார். தற்போது 2019 ஆம் ஆண்டு மீண்டும் அது Yediyurappa என ஆகி உள்ளது.

டிவிட்டரில் இது குறித்து “பெயரில் மன்னிக்கவும் எழுத்திக்களில் என்ன உள்ளது என யாரும் கேட்க வேண்டாம்” என பலரும் கிண்டல் செய்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி