பெங்களூரு:

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன்  கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கர்நாடகாவில் குவிந்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  பொதுத்தேர்தலுக்கு முன்னுதாரணமாக கர்நாடக தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்தது. இந்நிலையில், திருட்டுத்தமான கவர்னர் உதவியுடன் பதவி ஏற்ற எடியூரப்பா, உச்சநீதி மன்ற உத்தரவு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாமல் தனது பதவியை செய்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன், குமாரசாமி இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார். குமாரசாமி சார்பில்,  அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.

பதவியேற்பு விழாவில் பங்குபெற  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் ஆகியோர் கர்நாடகம் வந்துள்ளனர்.

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன்,  டில்லி முதல்வர் கேஜரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட பல  மாநில கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.