இனி ஊடகங்களை சந்திக்கவே மாட்டேன்! : கர்நாடக முதல்வர் குமாரசாமி சபதம்

னி ஊடகங்களை சந்தித்து பேசவே போவதில்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரியும், நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்கக் கோரியும் கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அவர்களுடன் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனாலும் பிரச்னை தொடர்கிறது.

இதற்கிடையே விவசாய சங்க தலைவர் ஜெயஸ்ரீ குரன்னவர் என்பவர் குறித்து குமாரசாமி அவதூறாக பேசியதாக வீடியோ ஒன்று  வைரலானது.

இந்த நிலையில், தன்னுடைய கருத்து ஊடகங்களில் திரித்து கூறப்பட்டுள்ளதாக  முதல்வர்  குமாரசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், ஊடகங்களுக்கு இனி பேட்டி அளிக்கப்போவதில்லை என்றும் அவர் ஆத்திரத்துடன் தெரிவித்தார்.

“ஊடகங்களின் செயல்பாடுகளால் நான் வருத்தமடைந்திருக்கிறேன். என்னை பற்றிய நியாயமற்ற முறையில் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. சில குறிப்பிட்ட ஊடகங்கள் எனக்கு எதிராக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சாதாரண விஷயத்தை கூட எனக்கு எதிராக பூதாகரமாக்கிவிடுகின்றன. . அது எனக்கு பெரிய வலியை அளித்துவிடுகிறது.

இனிமேல் ஊடகங்களை சந்திப்பது இல்லை என முடிவெடுத்திருக்கிறேன்.  உங்களுக்குத் தேவையானால்  செய்திகளை வெளியிடுங்கள்.  இல்லையென்றால் விட்டுவிடுங்கள். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை” என்று ஆதங்கத்துடன் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

குமாரசாமியின் இந்தப் பேச்சை கர்நாடக பாஜக தலைமை கடுமையாக விமர்சித்துள்ளது. ஊடகங்களை கையாள்வதில் முதல்வர் தோல்வி அடைந்துவிட்டதாகவும், இது பேரிடர் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.

#Karnataka #cm #kumaraswamy #blames #media #nottotalk #press #again

கார்ட்டூன் கேலரி