செய்தியாளர்கள் சந்திப்பில் தூங்கிய  முதல்வர்…!

பெங்களூரு,:

ர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பின்போது தூங்கி வழிந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

2018-ம் ஆண்டு நடைபெற இருக்கும்  கர்நாடகா சட்டசபை தேர்தலில் எடியூரப்பாதான்  பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் என பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா சமீபத்தில் கூறினார்.

இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் வேணுகோபால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, பாரதிய ஜனதா கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தார்.  அவருக்கு அருகில் முதல்வர் சித்தராமையா அமர்ந்திருந்தார். ஆனால், அவர் வேணுகோபால் பேசுவது குறித்து கண்டுகொள்ளாமல் தூங்கி வழிந்தார். இதை கவனித்த செய்தியாளர்கள் அவர் தூங்கு வதை படமெடுத்து வெளியிட்டு விட்டனர்.

இது கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுபோன்ற பொதுக்கூட்டங்களின் மேடைகளில் தூங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு ஜூலை  ஜூலை மாதம் கர்நாடக சட்டசபையில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது தூங்கி வழிந்தார். அதுபோல், கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திலும் தூக்கி வழிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.